பெருந்தொகை போதைப்பொருள் ஆயுதங்களுடன் ஜீ-பும்பாவின் சகாக்கள் கைது! - sonakar.com

Post Top Ad

Friday, 15 March 2019

பெருந்தொகை போதைப்பொருள் ஆயுதங்களுடன் ஜீ-பும்பாவின் சகாக்கள் கைது!


குடு சூட்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதன் பின்னணியில் கைதாகியுள்ள ஜீபும்பாவின் சகாக்கள் நால்வர் பெருந்தொகை போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


சுமார் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பல்வேறு ஆயுதங்கள், உபகரணங்கள் ஜாஎல பகுதி வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கஞ்சிபானை இம்ரானின் சகாவான ஜீபும்பா, போதைப் பொருள் வியாபாரத்தைத் தன் வசப்படுத்திக்கொள்ள குடு சூட்டியைக் கொலை செய்ய முனைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமையும் மாகந்துரே மதுஷ் குழு டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment