அன்டர்ஸ் பிரீவிக்கே வழிகாட்டி: பயங்கரவாதி பிரன்டன்! - sonakar.com

Post Top Ad

Friday 15 March 2019

அன்டர்ஸ் பிரீவிக்கே வழிகாட்டி: பயங்கரவாதி பிரன்டன்!


2011ம் ஆண்டு நோர்வே தலை நகர் ஒஸ்லோவில் இரட்டைத் தாக்குதலை நடாத்திய வலதுசாரி தீவிரவாதியான அன்டர்ஸ் பிரீவிக்கே தனது வழிகாட்டியனெ இன்றைய நியுசிலாந்து தாக்குதலின் சூத்திரதாரி பிரன்டன் குறிப்பெழுதி வைத்துள்ளமை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.


ஈவிரக்கமின்றி இளந்தொழிலாளர் அணி மீது பிரீவிக் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 69 பேர் உயிரிழந்திருந்ததுடன் அரச அலுவலகம் மீதான குண்டுத்தாக்குதலில் எண்மர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் தான் மேற்கொண்டது அவசியமான 'நடவடிக்கை' யென சாசனம் எழுதி வெளியிட்டிருந்த பிரீவிக் தனது குற்றத்தை குற்றமாகக் காண மறுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

இதனைப் பின்பற்றியுள்ள பிரன்டன், தான் அதிக பட்சம் 27 வருடங்களே சிறையிலிருக்க நேரிடும் எனவும் தானே தாக்குதல்களைத் திட்டமிட்டதாகவும் பிரீவிக்கே தனது வழிகாட்டியனெவும் தெரிவித்துள்ளதுடன் நீதிமன்றில் தான் குற்றவாளியென ஒப்புக்கொள்ளப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வெள்ளையின மேன்மைக் கொள்கையின் அடிப்படையிலான வலதுசாரி தீவிரவாத குழுக்கள் ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவில் இயங்கி வருகின்ற நிலையில் இன்றைய தினம் நியுசிலாந்தில் பள்ளிவாசல்களுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதுடன் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 49 பேர் உயிரிழந்துள்ளமையும் 20 பேர் தீவிர காயங்களுக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment