முதல் நாளே தாக்குதல் விபரங்களை வெளியிட்டிருந்த பயங்கரவாதி பிரன்டன்! - sonakar.com

Post Top Ad

Friday, 15 March 2019

முதல் நாளே தாக்குதல் விபரங்களை வெளியிட்டிருந்த பயங்கரவாதி பிரன்டன்!


வெள்ளியன்று தான் நடாத்தப் போக்கும் தாக்குதல் விபரங்களை வியாழனன்றே இணையத்தள பதிவொன்றின் மூலம் பயங்கரவாதி பிரன்டன் வெளியிட்டுள்ளமை பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறித்த தாக்குதலில் தான் உயிரை மாய்த்துக்கொள்ள விளைந்தால் சொர்க்கத்தில் சந்திக்கும் வரை விடைபெறுவதாகவும் வலது சாரி தீவிரவாதிகள் கருத்துப் பகிரும் தளமொன்றில் பதிவிட்டுள்ள பிரன்டன் மறுநாள் தனது தாக்குதலுக்கான நேரடி ஒளிபரப்பைக் காண்பதற்கு தனது முகப்புத்தக பக்கத்துக்கான இணைப்பையும் வெளியிட்டுள்ளமையைக் காண முடிகிறது.எனினும், இதற்கு முன் பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கைகள் எதிலும் தொடர்புபடாத நபர் என்பதால் குறித்த நபர் கண்காணிக்கப்பட்டிருக்கவில்லையென நியுசிலாந்து பிரதமர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆக்கிரமிப்பாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டிராது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் என தெரிவித்தே பிரன்டன் இத்தாக்குதலை நடாத்தியுள்ளதுடன் 2011 நோர்வே தாக்குதலை நடாத்திய தீவிரவாதி பிரிவீக்கை தமது வழிகாட்டியாகவும் பிரகடனப்படுத்தியுள்ளமையும் பண்டைய வரலாற்று சம்பவங்களை தமது கொள்கையின் அடிப்படையாக மேற்கோள் காட்டியுள்ளமையும் அவதானிக்கத்தக்க விடயங்களாகும்.

No comments:

Post a Comment