இனவாத பயங்கரவாதத்தை ஒழிக்க உலகம் ஒன்றிணைய வேண்டும்: ஜெசின்டா! - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 March 2019

இனவாத பயங்கரவாதத்தை ஒழிக்க உலகம் ஒன்றிணைய வேண்டும்: ஜெசின்டா!


வலதுசாரி, இனவாத பயங்கரவாதத்தை சர்வதேச மட்டத்தில் ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் நியுசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன்.


கடந்த வெள்ளிக்கிழமை தமது நாட்டில் அரங்கேற்றப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் நியுசிலாந்தைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்படவில்லையெனவும் வேறு எங்கோ பிறந்து வளர்ந்த, வேறு எங்கிருந்தோ வலதுசாரி பயங்கரவாத சித்தார்ந்தத்தை உள்வாங்கிய ஒருவராலேயே நடாத்தப்பட்டுள்ளது எனும் அடிப்படையில் இவ்வாறான பயங்கரவாத சித்தார்ந்தத்தை ஒழிக்க உலகம் ஒன்று பட வேண்டும் என ஜெசின்டா மேலும் தெரிவித்துள்ளார்.

வெள்ளையின மேன்மை வாத அடிப்படையில் பல ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகள் இடம்பெறுவதோடு அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் வருகை அதற்கு வலுவூட்டியதாக அமைந்துள்ளது. இந்நிலையில், அமைதியான நாடான நியுசிலாந்தில் கடந்த வெள்ளியன்று ஒரு வெள்ளையின மேன்மைவாத பயங்கரவாதியினால் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment