மைத்ரியை வேட்பாளராக ஏற்க மாட்டோம்: பிரசன்ன பிரளயம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 17 March 2019

மைத்ரியை வேட்பாளராக ஏற்க மாட்டோம்: பிரசன்ன பிரளயம்!


பெரமுன - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டு ஒப்பந்தம் எனும் போர்வையில் மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்குத் தாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.


ஒக்டோபாரில் மலர்ந்த மஹிந்த - மைத்ரி நட்புறவின் பின்னணி குறித்த மர்மம் நீடிக்கும் நிலையில் ஸ்ரீலசுக தரப்பில் மைத்ரிபால சிறிசேனவே தமது ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பெரமுன தரப்பில் கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவான குழுவும் எதிர்க் குரல்களும் ஒலித்து வருகின்றன.

இந்நிலையில், இரு தரப்பும் 'உடன்பாட்டு' அடிப்படையில் மைத்ரிபாலலை ஜனாதிபதி வேட்பாளராக்கக் கூடும் எனும் எதிர்பார்ப்பும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment