1000 கிலோ போதைப் பொருள் தேக்கம்: ச.மா அதிபர் அனுமதிக்காகக் காத்திருப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 17 March 2019

1000 கிலோ போதைப் பொருள் தேக்கம்: ச.மா அதிபர் அனுமதிக்காகக் காத்திருப்பு


நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 1000 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் தேங்கியிருக்கின்ற நிலையில் அவற்றைப் பகிரங்கமாக அழிப்பதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனை மற்றும் அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவிக்கிறது ஜனாதிபதியின் விசேட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு.


பல நூறு கிலோ கிராம்களில் அவ்வப்போது கைப்பற்றப்பட்டு வரும் போதைப் பொருட்கள் மீண்டும் கருப்புச் சந்தையைச் சென்றடைவதாக பரவலான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே ஒரு தொகை போதைப் பொருளை பகிரங்கமாக அழிப்பதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றன.

எனினும், சட்ட ஆலோசனை பெறப்பட்ட பின்னரே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment