ஜனாஸா அறிவித்தல்: ஒய்வு பெற்ற அதிபர் ஹிதாயத்துள்ளாஹ் (மாத்தறை) - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 March 2019

ஜனாஸா அறிவித்தல்: ஒய்வு பெற்ற அதிபர் ஹிதாயத்துள்ளாஹ் (மாத்தறை)


மாத்தறை, பள்ளிமுல்லை யைச் சேர்ந்த ஒய்வு பெற்ற அதிபர் ஹிதாயத்துள்ளாஹ் அவர்கள் நேற்று இரவு (25) தனது 95வது வயதில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

1923 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1951-12-31 இல் ஆசிரியர் சேவையில் இணைந்து  தர்கா நகர்,  அல் ஹம்ரா வித்தியாலயத்தில் உப ஆசிரியராகவும் பிறகு கல்பிட்டிய முஸ்லிம் வித்தியாலயம், களுத்தரை முஸ்லிம் வித்தியாலயம், பொல்கஹவெல முஸ்லிம் வித்தியாலயம்,  கெகுனுகொள்ள முஸ்லிம் வித்தியாலயம், வெலிகம அரபா முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் உதவி அதிபராகவும் பின் திக்வல்லை மின்ஹாத் முஸ்லிம் வித்தியாலயம், மாத்தறை கொட்டுவேகோடை முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடாசாலைகளில் அதிபராகவும் கடமை புரிந்துள்ளார். இவரது மாணவர்கள் நாடு முழுதும் பரவி இருக்கிறார்கள். ஒய்வு பெற்ற பின்னர்  இஸ்லாமிய அழைப்புப் பணியில் இவர் தனது காலத்தை ஈடு படுத்தினார். அல்லாஹ் அவரது சேவைகளைப் பொருந்திக் கொள்வானாக.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  இன்று  (26) மாலை மாத்தறை, பள்ளிமுல்லை மையவாடியில் இடம் பெறும்.

-ஹரீஸ் ஸாலிஹ் 

No comments:

Post a comment