ரொமேனியாவில் அவசரமாகத் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 March 2019

ரொமேனியாவில் அவசரமாகத் தரையிறங்கிய ஸ்ரீலங்கன்


லண்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானம் ரொமேனியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.



பயணி ஒருவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதன் நிமித்தமே யு.எல். 504 விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், விமானப் பணியாளர்களுக்கான சர்வதேச விதிமுறைகளுக்கமைய தேவைப்படும் ஓய்வு நேரத்தை வழங்கும் நிமித்தம் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும் நேற்று மதியம்  கொழும்பில் தரையிறங்க வேண்டிய விமானமே இவ்வாறு தாமதத்துக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment