ஜனாதிபதியுடன் 'பேசியே' வாக்களிப்பை புறக்கணித்தோம்: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Monday, 25 March 2019

ஜனாதிபதியுடன் 'பேசியே' வாக்களிப்பை புறக்கணித்தோம்: தயாசிறி


வரவு-செலவுத் திட்டத்தின் போது வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பதற்கான தீர்மானத்தை ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்டதாக தெரிவிக்கிறார் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர.2018 ஒக்டோபரில் மஹிந்த - மைத்ரி இடையே மலர்ந்த நட்பின் அடிப்படை தொடர்ந்தும் மர்மமாக இருக்கும் நிலையில் பெரமுன தரப்பில் மைத்ரியை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பெரமுனவின் நிலைப்பாடுகள் அனைத்தையும் ஆதரிக்க சு.க மறுத்து வருகிறது.

இதேவேளை வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்களிப்பை தவிர்த்துக் கொள்வதற்கான முடிவு ஜனாதிபதியுடனான (கட்சித் தலைவர்) பேச்சுவார்த்தையின் பின்னரே எட்டப்பட்டதாக தயாசிறி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment