பாணந்துறை சர்ச்சை: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 22 March 2019

பாணந்துறை சர்ச்சை: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு


பாணந்துறை, சரிக்காமுல்லையில் இடம்பெற்ற தகராறின் பின்னணியில் கைது செய்யப்பட்ட ஐவரது விளக்கமறியலும் எதிர்வரும் 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் குடிபோதையில் வந்ததாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கம், கைகலப்பாக மாறியதன் பின்னணியில் பிரதேசத்தில் சற்று நேரம் இனவாத பதற்றம் நிலவியிருந்தது.

எனினும், விரைந்து செயற்பட்ட காவற்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ததுடன் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரும் ரோந்தில் ஈடுபட்டு நிலைமையைத் தணித்திருந்தனர்.

அளுத்கம, கிந்தொட்ட, திகன ஆகிய அனைத்து வன்முறைகளின் ஆரம்பமும் இவ்வாறான தனி நபர் சர்ச்சைகளே என்பது நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a comment