யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு கணனி தொகுதி வழங்கி வைப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 22 March 2019

யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு கணனி தொகுதி வழங்கி வைப்பு


யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு  ஒரு  கணனி தொகுதி அடங்கிய பொருட்களை மக்கள் பணிமனை தலைவரும் அமைச்சரின் யாழ் மாவட்ட மீள் குடியேற்ற இணைப்பாளர்  சுபியான் மௌலவி   பாடசாலை அதிபர் சேகு ராஜிதுவிடம் கையளித்துள்ளார்.

இன்று(22) காலை யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு சென்ற சுபியான் மௌலவி பாடசாலை வளாகத்தில் வைத்து  குறித்த பொருட்களை கையளித்ததுடன் பாடசாலையின் பல்வேறு தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த  சுபியான் மௌலவி  இப்பாடசாலையின் புனரமைப்பு விடயத்தில் அன்று தொட்டு இன்று வரை பங்களிப்பை வழங்கி வருவதுடன் மேலும் இவ்வருட இறுதிக்குள் பாடசாலையின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்று கொள்ள நடவடிக்கை மேற்கொள்வேன் என உறுதி கூறினார்.

குறித்த கணனி தொகுதி   மீள்குடியேற்றத்துக்கான விஷேட வடக்கு செயலணியினால் (TFR) ஒதுக்கப்பட்ட நிதி ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிதி மூலம்   யாழ் ஜின்னா மைதான பார்வையாளர் மண்டபம்  இவ் விளையாட்டு மைதானத்துக்கான மின்னினைப்பு உள்ளிட்ட யாழ் ஒஸ்மானியா கல்லூரி அபிவிருத்திக்காக  சுமார் பல மில்லியன் ரூபா செயலணியின்  ஊடாக நிதி ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிதியானது  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்ட துரித முயற்சியின் பலனாக   கிடைக்கப்பெற்றமையாகும்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a comment