மஹிந்த - மைத்ரி டீல் 'அதுதான்' : புத்ததாச! - sonakar.com

Post Top Ad

Thursday, 21 March 2019

மஹிந்த - மைத்ரி டீல் 'அதுதான்' : புத்ததாச!


கடந்த ஒக்டோபரில் மலர்ந்த மஹிந்த ராஜபக்ச - மைத்ரிபால சிறிசேன இடையேயான நட்புறவு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை வேட்பாளராக்கும் அடிப்படையிலானது என தெரிவிக்கிறார் முன்னாள் கடுவெல நகரபிதா புத்ததாச.



கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக்கப்படுவதற்கு முன்னாள், இந்நாள் ஸ்ரீலசுகட்சியினர் பலர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். குமார வெல்கம, மஹிந்த அணியில் இருந்து கொண்டே அதனை பகிரங்கமாக எதிர்த்து வரும் நிலையில் புத்ததாச தலைமையிலான அணியினர் இது தொடர்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றைக் கூட்டி இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மைத்ரிபால சிறிசேன இன்று அரசியல் சந்தர்ப்பவாதிகளால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக புத்ததாச மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment