நியுசிலாந்தில் வெள்ளியன்று தேசிய 'ஸ்கார்ப்' தினம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 21 March 2019

நியுசிலாந்தில் வெள்ளியன்று தேசிய 'ஸ்கார்ப்' தினம்!கடந்த வெள்ளிக்கிழமை நியுசிலாந்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக அந்நாட்டு அரசும் மக்களும் பெருமளவில் திரண்டு முஸ்லிம்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ஜசின்டா அர்டன், இரு வாரங்களுக்குள் நியுசிலாந்தில் இராணுவ தரத்திலான அனைத்து வகை துப்பாக்கிகளையும் தனி நபர் பாவனையிலிருந்து தடை செய்வதற்கான சட்டமூலம் நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளார்.


இத் தொடர்ச்சியில் நாளைய தினம் நியுசிலாந்தில் பெண்கள் முக்காடு அல்லது ஹிஜாப் அணிந்து தமது ஐக்கியத்தை வெளிப்படுத்துவற்கான செயற்திட்டமொன்று சிவில் சமூக அமைப்புகளால் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அதற்கான பிரச்சாரங்களும் இடம்பெறுகின்றன.

நியுசிலாந்து பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ள அந்நாட்டு அரசியல் தலைமைகள், சட்ட-திட்டங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து சமூக ஐக்கியத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு அரசியல் தஞ்சம் கோரியவர்களை கண்ணியப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறது. 

இதேவேளை, வெள்ளிக்கிழமை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் பயங்கரவாதி பிரன்டனைத் தாம் மன்னித்து விட்டதாகவும் குறித்த நபருக்கு நல்லறிவு பிறக்க வேண்டும் எனவும் பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment