முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் இக்பால் அத்தாஸின் அனுபவப்பகிர்வு - sonakar.com

Post Top Ad

Thursday, 21 March 2019

முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் இக்பால் அத்தாஸின் அனுபவப்பகிர்வு


புலனாய்வு ஊடகவியலாளரும் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆலோசனை ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸின் அனுபவப்பகிர்வும் புலனாய்வு ஊடகவியல் தொடர்பான கலந்துரையாடலும் கடந்த 20ம் திகதி (20.03.2019) மருதானை தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 


ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புலனாய்வு ஊடகத்துறையில் ஆர்வமுள்ள பல ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.  

இதன்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட அதேவேளை, போரத்தின் உபதலைவர் எம்.பி.எம். பைரூஸினால் ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

-SLMMF

No comments:

Post a Comment