மதுஷின் இரத்தினக் கல் கொள்ளையின் பின்னணியில் 'கொந்தராத்து' - sonakar.com

Post Top Ad

Saturday 23 March 2019

மதுஷின் இரத்தினக் கல் கொள்ளையின் பின்னணியில் 'கொந்தராத்து'


மாகந்துரே மதுஷின் உத்தரவின் பேரில் இடம்பெற்ற விலையுயர்ந்த இரத்தினக் கல் கொள்ளையின் பின்னணியில் உண்மையான உரிமையாளரே இருப்பதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.



குறித்த தகவலின் பிரகாரம், தென்னாபிரிக்கர் ஒருவரே உண்மையான உரிமையாளர் எனவும் அவரால் இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அதனைத் தடுத்த சுங்க அதிகாரியூடாகவே குறித்த கல், கொள்ளையிடப்பட்ட உள்ளூர் வர்த்தகரிடம் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டுக்குள் குறித்த இரத்தினக் கல்லைக் கொண்டு செல்ல சுங்க அதிகாரியினால் கேட்கப்பட்ட பெருந்தொகை பணமில்லாமையால் அதனை விட்டு நாடு திரும்பிய போதிலும், மீளவும் அதை நேரடியாகப் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையிலேயே மதுஷ் கூட்டத்திடம் அதனைப் பெற்றுத்தருமாறு கொந்தராத்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டமை நிரூபிக்கப்படின் அதனை அரசுடமையாக்குவதற்கு இடமிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றமையும் 7 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே மதுஷ் குழுவினர் கொள்ளையிட முயன்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment