வில்பத்து: கடந்த 4 வருடங்களில் ஒரு அங்குலமேனும் அரசு அனுமதிக்கவில்லை - sonakar.com

Post Top Ad

Saturday, 23 March 2019

வில்பத்து: கடந்த 4 வருடங்களில் ஒரு அங்குலமேனும் அரசு அனுமதிக்கவில்லை


வில்பத்து காடழிப்பு இடம்பெற்று வருவதாக தேர்தல் காலத்தில் அவ்வப்போது எழுப்பப்பட்டு வரும் சர்ச்சை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கடந்த நான்கு வருடங்களில் அரசாங்கம் ஒரு அங்குல நிலமேனும் எது வித மீள் குடியேற்றத்துக்காகவும் (தனி நபர் உட்பட) அனுமதிக்கவில்லையென தெரிவித்துள்ளார்.


வில்பத்து சரணாலய பகுதியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் காடழிப்பு ஊடாக மீள் குடியேற்றம் செய்வதாக அவ்வப்போது சர்ச்சை உருவாக்கப்பட்டு, ஊடகங்களில் பேசு பொருளாக்கப்பட்டு, தேர்தல் பின்போடப்பட்டதும் விவகாரம் அடங்கிப் போவதுண்டு.

அந்த வகையில் இம்முறையும் அதே ஆனந்த தேரர் ஊடாக இவ்விவகாரம் பேசு பொருளாக்கப்பட்டுள்ளமையும் அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை முஸ்லிம் 'இனத்தின்' மீதானதாக சித்தரிக்கப்பட்டு வாத-விவாதங்கள் ஊக்குவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment