திரிபீடக வாரத்தை ஒட்டி களனி ரஜமகா விகாரையில் 'தானம்' - sonakar.com

Post Top Ad

Thursday 21 March 2019

திரிபீடக வாரத்தை ஒட்டி களனி ரஜமகா விகாரையில் 'தானம்'


நூறு மகா சங்க உறுப்பினர்களின் தலைமையில் பாரிய தான நிகழ்வு களனி ரஜமகா விகாரையில் புதன்கிழமை இடம்பெற்றது.

திரிபீடக வாரத்தை ஒட்டி ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையுடன் மேல் மாகாண ஆளுநர் பணிமனையும், மேல் மாகாண பிரதம அமைச்சர் காரியாலயமும், களனி பிரதேச சபையும்  இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திரிபீடகமானது தேசிய மரபுரிமைச் சொத்தாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ஜனவரி மாதம் 05 ஆந் திகதி மாத்தளை அளுவிகாரையில் வைத்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.


யுனெஸ்கோ அமைப்பினது ஆலோசனைக்கிணங்க மகா சங்கத்தினரின் திட்டத்திற்கமைய அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பங்கேற்புடன் இந் நிகழ்வு எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்தின, மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ். சாலி, மேல் மாகாண பிரதம அமைச்சர் இசுரு தேவப்பிரிய , மாகாண சபை அமைச்சர்கள், மூத்த அரச அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில் சமூகந் தந்திருந்தனர்.

வணக்கத்திற்குரிய கொட்டுப்பொல அமரகீர்த்திதேரர்  இந் நிகழ்வில் உரையாற்றும் போது, திரிபீடகம் தேசிய மரபுரிமைச் சின்னமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமையானது ஜனாதிபதி அவர்களின்  பெருந்தன்மையான செயற்பாடாகும்.

திரிபீடகத்தின் முக்கியத்துவத்தையும், புத்தரினுடைய தத்துவங்கள் மற்றும் கொள்கைகளையும்  முழு உலகும் விளங்கிக் கொள்வதற்கான அரிய சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமய, சமூக, பொருளாதார மற்றும் அனைத்து  கூட்டிணைந்த துறைகளையும் உள்ளடக்கியதான அனைத்து மக்களிற்கும் நன்மை பயக்கக்கூடிய ஒரு பரந்த நிகழ்ச்சித்திட்டமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும்,  நாட்டில் வாழும் அனைத்து சமூகத்தினரும் சாந்தி, சமாதானத்துடன் நிம்மதியாக வாழும் ஒரு நாடாக இலங்கை அமையவேண்டும்  என்பதே அவரது விருப்பமெனவும் ஆளுநர் குறிப்பிடார்.

சமூக நலன்களை மேம்படுத்தும் வகையில் போதைப்பொருள் பாவனைக்கெதிரான போராட்டம்,  இலஞ்சம் மற்றும்  ஊழலிற்கெதிரான விழிப்புணர்வு, புகையிலைப் பயன்பாட்டு மட்டத்தைக் குறைத்தல், ஆரம்ப மற்றும் இடைநிலைக்கல்வியின் தரத்தை மறுசீரமைத்தல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களையும் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

-Rasooldeen

No comments:

Post a Comment