
கோட்டாபே ராஜபக்சவை 'எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்' என நவின் திசாநாயக்க வர்ணிக்க, அவரது மாமா கரு ஜயசூரியவே மறு முனையில் வேட்பாளராக வேண்டும் என கோட்டாபே புகழ்ந்துரைத்துள்ளார்.
நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்சவின் ஆஸ்தான விகாரையில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் வைத்தே இருவரும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
இதன் போது தனது தந்தை 52 வயதில் ஜனாதிபதி வேட்பாளராக முற்பட்டதாகவும் அதையும் விட அதிக வயதில் கோட்டாபே அந்த சவாலை ஏற்கப் போவது பாராட்டத்தக்கது எனவும் நவின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment