பாணந்துறை: தனிநபர் பிரச்சினையால் உருவான பதற்றம் சுமுகம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 March 2019

பாணந்துறை: தனிநபர் பிரச்சினையால் உருவான பதற்றம் சுமுகம்



பாணந்துறை சரிக்காமுல்ல பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் சிலருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின நபர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினை கைகலப்பாக மாறியதால் ஏற்பட்ட பதற்ற நிலை சுமுகமடைந்துள்ளது.


குடிபோதையில் வந்து மோதிய மனிதரை குறித்த இளைஞர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுவதையடுத்து சிங்கள பகுதியிலிருந்து பெருமளவு வந்த அப்பகுதி மக்கள் குறித்த இடத்தில் வீடொன்றின் மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர்.

இந்நிலையில், பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment