அரச பாடநூல்களில் தொடர்ந்தும் வழுவுடனான தமிழ்ப் பிரயோகம்: கவனிப்பார்களா? - sonakar.com

Post Top Ad

Wednesday 20 March 2019

அரச பாடநூல்களில் தொடர்ந்தும் வழுவுடனான தமிழ்ப் பிரயோகம்: கவனிப்பார்களா?


'சோனகர் டொட் கொம்' இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட 'அரசாங்க வெளியீடுகளில் வழுவுடனான தமிழ்ப் பிரயோகம்' எனும் தலைப்பிலான எனது கட்டுரையில் பல்வேறு மொழிப் பிரயோக வழுக்களுடன்  ர் ரி ரீ ஆகிய  உயிர்மெய்யெழுத்துக்கள் ர் ரி ரீ  என வழுவாகப் பிரயோகிக்கப்பட்டு வருவது பற்றிக குறிப்பிட்டிருந்தேன். 

அக்கட்டுரை அன்றே பிரசுரிக்கப்பட்டது (12 September 2014).  அத்துடன் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை அறிய முடிகின்றது. இது தமிழ் மொழி அபிமானிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். இதற்காக அக்கட்டுரையை வெளியிட்ட 'சோனகர் டொட் கொம்' இணையத் தளத்துக்கும், புதிதாக வெளியிடப்பட்ட தமிழ் மொழி மூலப் பாட நூல்களில் குறிப்பிட்ட வழுக்களைத் தவிர்க்க ஏற்பாடு செய்த  கல்வி வெளியீட்டுத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தமிழ் நெஞ்சங்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர் காலத்தில் இவ்வாறான வழுக்கள் ஏற்படாமல் தவிர்ப்பது தரம் 1முதல் பல்கலைக்கழகம் ஈறாகத் தமிழ் மொழியைப் போதிக்கும் ஆசான்களின் பொறுப்பாகும்.



தற்போதுகூட வழுக்களைத் தவிர்த்து வெளியிடப்பட்டுள்ள பாடநூல்களுட் கீழ்க்காணும் சில பாடநூல்களில் ஒரு சில வாக்கியங்களில் குறிப்பிட்ட எழுத்துகள் வழுவாகப் பிரயோகிக்கப் பட்டுள்ளன. எதிர்காலத்தில் அவற்றையும் தவிர்த்துக்கொண்டால் எழுத்து வழுப் பிரயோகமே அற்ற பாடநூல்களை மாணவர் பயன்படுத்துவர்.

கல்வி  வெளியீட்டுத் திணைக்களத்தினால் 2001ஆம் ஆண்டு முதல் பிரசுரிக்கப்பட்ட தமிழ் மொழிப் பாடநூல்களுள் தரம் 5ற்கான இஸ்லாம்,(தமிழ் அரிச்சுவடி இடம்பெறவில்லை) கணிதம், 2002ல் பிரசுரிக்கப்பட்ட தமிழ் மொழி ஆகிய நூல்களில் (ஆங்கிலம் பகுதி ஐரூஐஐ ஆகிய பாடநூல்களில்  'ஒரு தாய் மக்கள் நாமாவோம்' என்ற பாடலில் மாத்திரம் குறித்த எழுத்துக்கள்  வழுவாக உள்ளன.) ஏனைய அனைத்துப் பாடங்களும் வழுவின்றி இடம் பெற்றுள்ளன.

வழுக்களைத் தவிர்த்து 2015 தொடக்கம் பிரசுரிக்கப்பட்டுள்ள பாடநூல்கள்:-

  • 2015இல்(முதலாம் பதிப்பு) பிரசுரிக்கப்பட்டுள்ள தரம் 1க்கான பாடநூல்கள், 
  • 2016 இல்(முதலாம் பதிப்பு)  பிரசுரிக்கப்பட்டுள்ள தரம் 2, தரம் 3 க்கான சில பாடநூல்கள்
  • 2017இல்(முதலாம் பதிப்பு) பிரசுரிக்கப்பட்டுள்ள தரம் 3 க்கான எஞசிய பாடநூல்கள்
  • 2001லும் 2002லும் (முதலாம் பதிப்பு) பிரசுரிக்கப்பட்டுள்ள தரம் 5க்கான, சில பாடநூல்கள்


வகுப்புகளின் அனைத்துப்பாடநூல்களிலும் அதுவரை பிரசுரிக்கப்பட்டு வந்த தமிழ் அரிச்சுவடி தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நூல்களில் 'கண்காணிப்பும் மேற்பார்வையும்' என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள 'பதவிப் பெயர்களிலும் முகவரிகளிலும் குறித்த எழுத்துக்கள் வழுவான வடிவில் இடம் பெற்றுள்ள அதே வேளை ஏனைய  அனைத்துப் பாடங்களிலும் வழுவின்றி இடம் பெற்றுள்ளன 

2015 முதல் பிரசுரிக்கப்பட்ட தரம் 11ற்கான பாட நூல்களுள்  விஞ்ஞானம் பகுதி I&II வரலாறு ஆகிய நூல்களில் பதிப்புரிமை அரசினர்க்கே என்ற வாக்கியத்திலும், 2017 முதல் பிரசுரிக்கப்பட்ட  தரம் 9 விஞ்ஞானம் பகுதி ஐரூஐஐ ஆகிய நூல்களில் பொருளடக்கத்திலும், 'எல்லா உரிமையும் அரசினர்க்கே' என்ற வாக்கியத்திலும் குறிப்பிட்ட எழுத்துக்கள் வழுவாக உள்ளன. ஏனைய அனைத்துப் பாடங்களிலும் வழுவின்றி இடம் பெற்றுள்ளன. 

2017 முதல் பிரசுரிக்கப்பட்ட  தரம் 9 கணிதம் பகுதி I,II&III தமிழ் மொழியுலம் இலக்கியமும், சுகாதாரமும் உடற் கல்வியும், இஸ்லாம், புவியியல், குடியியற் கல்வி, செயன்முறைத் தொழிந்நுட்பம் ஆகிய பாடநூல்கள் அனைத்தும் வழுவின்றி இடம் பெற்றுள்ளன. 

2014 முதல் பிரசுரிக்கப்பட்ட தரம் 10ற்கான அனைத்துப் பாட நூல்களும்  வழுவின்றி இடம் பெற்றுள்ளன. 2015இல் பிரசுரிக்கப்பட்ட தரம் 11ற்கான அனைத்துப் பாட நூல்களும்  வழுவின்றி இடம் பெற்றுள்ளன.

எனவே தற்போது கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் தரம் 1 முதல் தரம் 11 ஈறாகப் தமிழ் மொழியில் பிரசுரிக்கப்பட்டுள்ள அனைத்துப் பாட நூல்களிலும்  ர், ரி,ரீ ஆகிய எழுத்துகள் வழுவின்றி இடம் பெற்றுள்ளன. ஆனால் கடந்த 35 வருடங்களாக சமூகமயப்பட்டுப் போன மேற்படி வழுக்களைக் களைவது அல்லது ஒழிப்பது சாத்தியப்படுமா? 
               
கலாபூஷணம் எஸ்.எல்.எம். பரீத்
ஓய்வு நிலை ஆசிரியர்

No comments:

Post a Comment