மஹிந்த தோண்டியெடுத்திருக்கும் 'வசீம் தாஜுதீன்' : ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 March 2019

மஹிந்த தோண்டியெடுத்திருக்கும் 'வசீம் தாஜுதீன்' : ரஞ்சன்


தேர்தல் தேவைக்காக வசீம் தாஜுதீன் விவகாரம் அவ்வப்போது தோண்டியெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்ற நிலையில் இம்முறை அதனை மஹிந்த ராஜபக்சவே செய்திருப்பதாக தெரிவிக்கிறார் ரஞ்சன் ராமநாயக்க.இதனடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சி இதனை செய்யவில்லையெனவும் மஹிந்தவே இது பற்றி பேச ஆரம்பித்துள்ளதோடு வசீம் தாஜுதீன் மணிக்கு 175 கி.மீற்றர் வேகத்தில் பயணித்ததாகவும் தெரிவித்துள்ளமை புதிய தகவல் எனவும் அது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் எனவும் ரஞ்சன் வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த சொல்லும் அடிப்படையில் கணக்குப் பிழைப்பதாகவும் தெரிவிக்கும் ரஞ்சன் 175 கி.மீ வேகத்தில் பயணித்த ஒருவர் அதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் 5 கி.மீ தொலைவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தண்ணீர் போத்தல் வாங்கியிருப்பதும், இடையில் தனது பர்ஸினை வெளியில் வீசுவதும் அனைத்தும் ஒன்றோடு ஒன்று முரண்படுவதாகவும் ரஞ்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments:

Post a comment