
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது திடீரென மஹிந்த ராஜபக்ச பக்கம் தாவி, ரணில் - மைத்ரியின் கையொப்பங்களை போலியாக இணைத்து வாக்காளர்களை திசை திருப்பும் வகையில் ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்த விவகாரத்தின் பின்னணியிலான வழக்கை முடித்துக்கொள்ள இரு தரப்பும் நீதிமன்றுக்கு வெளியில் இணங்கியுள்ளதாக இன்று மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்புடன் இடம்பெற்ற இவ்வழக்கின் பின்னணியில் திஸ்ஸ விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். எனினும், தற்போது சம்பந்தப்பட்டவர்கள் இணக்கப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதியுடன் பெரும்பாலும் வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment