5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை இனி இல்லை: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Monday, 25 March 2019

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை இனி இல்லை: மைத்ரி


5ம் தரத்தில் மாணவர்கள் முகங்கொடுக்கும் புலமைப்பரிசில் பரீட்சை தனது பரிந்துரைக்கேற்ப நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


குறித்த பரீட்சை போட்டிப் பரீட்சையாக மாறியுள்ளதுடன் மாணவர்களுக்கு மேலதிக சுமையாக உருவெடுத்துள்ளதாக அண்மைக்காலமாக விசனம் வெளியிடப்பட்டு வந்த நிலையில் ஜனாதிபதி இன்று இவ்வாறு அறிவித்துள்ளார்.

திறமையுள்ள ஏழை மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையைப் பெற்றுத் தரும் வண்ணம் உருவாக்கப்பட்ட குறித்த பரீட்சை இன்று குழந்தைப் பருவத்தில் பெரும் கல்விச் சுமையாகவும் போட்டியையும் உருவாக்கியுள்ளதாக கல்வியமைச்சரும் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment