நியுசிலாந்து: பயங்கரவாதி பிரன்டனுக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Saturday, 16 March 2019

நியுசிலாந்து: பயங்கரவாதி பிரன்டனுக்கு விளக்கமறியல்


நியுசிலாந்தில் வெள்ளியன்று பள்ளிவாசல்களுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட பிரன்டன் டரன்டுக்கு எதிர்வரும் ஏப்ரல் 5ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.


சிறை செல்வதை எதிர்பார்த்தே தனது தாக்குதலை நடாத்தியுள்ள குறித்த நபர், தனது வழிகாட்டியான நோர்வே தீவிரவாதி அன்டர்ஸ் பிரீவிக் போன்றே வெள்ளையின சக்தியை பிரதிபலிக்கும் விரல் மூல சமிக்ஞை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



குற்றச்சாட்டுக்கு நீதிமன்றில் பதில் எதுவும் தெரிவிக்காத நிலையில் பிரன்டன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை நியுசிலாந்து எங்கும் பயங்கரவாத தாக்குதலுக்கு மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

No comments:

Post a Comment