பள்ளிக்குழந்தைகளுடன் பேருந்தைக் கடத்தி எரியூட்டிய சாரதி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 March 2019

பள்ளிக்குழந்தைகளுடன் பேருந்தைக் கடத்தி எரியூட்டிய சாரதி!


51 பள்ளிக்குழந்தைகளுடன் பேருந்தைக் கடத்திச் சென்று சாரதியே எரியூட்டிய சம்பவம் இத்தாலி, மிலானில் இடம்பெற்றுள்ளது.



பேருந்தை வழமைக்கு மாறான பாதையில் கொண்டு சென்றதுடன் குழந்தைகளை இருக்கைகளில் கட்டி வைத்து, கத்தியால் மிரட்டிய 47 வயது சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் போது பேருந்தில் இருந்த சிறுவன் தனது பெற்றோருக்கு கைத் தொலைபேசியூடாக தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உயிர்ச் சேதத்தைத் தவிர்த்துள்ளனர்.

எனினும், 14 குழந்தைகள் மூச்சுத்திணறலுக்குள்ளாகியுள்ளதாகவும் பேருந்தை விமான நிலையத்துக்கு கொண்டு செல்லவே முயன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment