மக்களை ஒடுக்கியடக்கும் 'பட்ஜட்' : மஹிந்த - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 March 2019

மக்களை ஒடுக்கியடக்கும் 'பட்ஜட்' : மஹிந்த


பெயரளவில் சலுகைகளை அள்ளித்தருவது போல அமைந்திருந்தாலும் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களை ஒடுக்கியடக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


இதன் விளைவுகளை மக்கள் அறிந்து கொள்ள சற்று கால தாமதமாகும் எனவும் தெரிவிக்கின்ற அவர், பட்ஜட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் சென்றமை கவலையளிப்பதாகவும் தெரிவிக்கிறார்.


ஸ்ரீலசுகட்சியுடன் இணைந்தே பணியாற்றுவதாக மஹிந்த தரப்பு தெரிவிக்கின்ற போதிலும் அக்கட்சியை பெரமுனவின் ஆளுமைக்குக் கீழ் கொண்டுவர முயல்வதாக மஹிந்த அதிருப்தியாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment