கஞ்சிபானை இம்ரானின் சகா 'ஜீ-பும்பா' கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 March 2019

கஞ்சிபானை இம்ரானின் சகா 'ஜீ-பும்பா' கைது!



கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய சகாவும் அண்மையில் இம்ரானின் துணைவியென நம்பப்படும் குடு சூட்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபருமான ஜீ பும்பா என அறியப்படும் முஹமத் சமூர் முஹமத் சியாம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த நபர் கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிசார் கம்பளையில் ஒளிந்திருந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.


கஞ்சிபானை இம்ரான் கைதானதையடுத்து பிரதேசத்தில் குடு வியாபாரத்தைத் தன் வசப்படுத்தும் நோக்கிலேயே குறித்த நபர் தனது தாயை சுட்டதாக குடு சூட்டியின் புதல்வர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment