ஆட்சிக்கு வந்ததும் 'கொமிசன்' எடுப்பவர்களுக்கு தண்டனை: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Sunday, 31 March 2019

ஆட்சிக்கு வந்ததும் 'கொமிசன்' எடுப்பவர்களுக்கு தண்டனை: மஹிந்த


தான் ஆட்சிக்கு வந்ததும் தரகுப் பணம் எடுப்பவர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் மற்றும் ஊழல் வாதிகளுக்குத் தண்டனையளிக்கப் போவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.பலங்கொடயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள மஹிந்த, தற்போதைய அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியெனும் பேரில் டீல்களை நடாத்தி அதன் ஊடாக கொமிசன் பெற்று வருவதை மாத்திரமே செய்வதாகவும் தாம் ஆட்சிக்கு வந்ததும் தண்டனை வழங்கப் போவதாகவும் தெரிவிக்கிறார்.

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக எழுந்த மக்கள் அலையின் பயனிலேயே மைத்ரி-ரணில் கூட்டரசு பதவிக்கு வந்திருந்தமையும் 2015ல் இதேவிடயத்தை மறுதரப்பு தெரிவித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a comment