பிரதேச முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறிய நியுசிலாந்து பிரதமர் - sonakar.com

Post Top Ad

Saturday, 16 March 2019

பிரதேச முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறிய நியுசிலாந்து பிரதமர்



வெள்ளியன்று நியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து இன்று பிரதேச முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளதுடன் அனைத்து மக்களும் துயர் பகிர்வில் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளார் நியுசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டன்.


நியுசிலாந்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு நாட்டில் இடமில்லையென நேற்றைய தினமே தெரிவித்திருந்த அவர், நேற்று இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல் என உடனடியாகப் பிரகடனப்படுத்தியிருந்தார்.




வழக்கமாக மேலை நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை பயங்கரவாத தாக்குதலாக சித்தரிப்பதில் தயக்கம் காட்டப்படுகின்ற நிலையில், ஜெசின்டா உடனடியாக பயங்கரவாத தாக்குதல் என சித்தரித்திருந்ததோடு உடன் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.



இந்நிலையில், இன்று பிரதேச முஸ்லிம்களை நேரடியாகவே சந்தித்து அவர் துயர் பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment