ரஞ்சனின் 'கொகைன்' பட்டியல் எங்கே? நாடாளுமன்றில் கேள்வி! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 March 2019

ரஞ்சனின் 'கொகைன்' பட்டியல் எங்கே? நாடாளுமன்றில் கேள்வி!


நாடாளுமன்றில் கொகைன் உபயோகிப்பவர்கள் இருக்கிறார்கள் என ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டிருந்த அதேவேளை அந்த பட்டியல் இன்னும் வெளியிடப்படாமை குறித்து நாடாளுமன்றில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளதுடன் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.


ஊடகங்களில் பெயர் எடுப்பதற்காக ரஞ்சன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளாரா என சந்தேகம் எழுவதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹேசா விதானகே சந்தேகம் வெளியிட்டுள்ள அதேவேளை, பட்டியல் இன்னும் தமக்குக் கிடைக்கவில்லையென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.ரஞ்சன் பெயர்ப் பட்டியவை வெளியிடாமை அனைத்து உறுப்பினர்களின் கீர்த்தியையும் பாதிப்பதாக பலர் குரல் எழுப்பியுள்ளமை தொடர்பில் சபாநாயகரும் தனது கவலையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment