பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ். செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 March 2019

பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ். செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்!நியுசிலாந்து பயங்கரவாத தாக்குதலை ஆதரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அவுஸ்திரேலிய செனட்டர் பிரேசர் அன்னிங் மீது 17 வயது அவுஸ்திரேலிய இளைஞன் முட்டையால் அடித்து தனது எதிர்ப்பை வெளியிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அவ்விளைஞனை சர்ச்சை செனட்டர் திருப்பித் தாக்கிய அதேவேளை அவரது ஆதரவாளர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், குறித்த இளைஞனுக்கு ஆதரவாக, அவரது சட்டச் செலவுகளுக்கான நன்கொடைகள் குவிகின்ற அதேவேளை குறித்த செனட்டரை நாடாளுமன்றில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது.நியுசிலாந்தில் தாக்குதல் நடாத்திய பிரன்டனும் வெள்ளையின மேன்மைவாத பயங்கரவாதியென்பதோடு பிரேசர் அனிங்கும் குடிவரவாளர்களுக்கு எதிராகப் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment