கிழக்கில் ஐ.நாவை வலியுறுத்தி மக்கள் பேரணி - sonakar.com

Post Top Ad

Tuesday 19 March 2019

கிழக்கில் ஐ.நாவை வலியுறுத்தி மக்கள் பேரணி


ஐநாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இன்று (19) செவ்வாய்க்கிழமை   கிழக்கில்   மக்கள் எழுச்சிப் பேரணி  ஒன்று இடம்பெற்றது.


இதன் போது கல்லடி பாலத்தில் இருந்து குறித்த பேரணி ஆரம்பமாகி பின்னர் ரயில் நிலைய வீதி ஊடாக கடந்து காந்தி பூங்கா வரை சென்றடைந்தது.

தொடர்ந்து அங்கு ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான  மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு தத்தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அதிகளவான பொதுநிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டிருந்தன.எனினும் பொதுபோக்குவரத்து வழமை போன்று இயங்கியதை காண முடிந்தது.ஆனால் திருகோணமலை அம்பாறை மாவட்டங்கள் வழமை போன்று இயல்பு நிலையில் இயங்கியதுடன் பொது நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment