அவனை பயங்கரவாதி என்று மட்டுமே அழைப்பேன்: நியுசிலாந்து பிரதமர்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 March 2019

அவனை பயங்கரவாதி என்று மட்டுமே அழைப்பேன்: நியுசிலாந்து பிரதமர்!


அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, தனது சித்தார்ந்தத்தை நிறுவ நினைத்த ஒரு கிரிமினலின் பெயரை ஒரு போதும் உச்சரிக்கத் தனக்கு விருப்பமில்லையென தெரிவித்துள்ள நியுசிலாந்து பிரதமர், அவனை பயங்கரவாதி என்று மட்டுமே அழைப்பேன் என நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய பிரஜையான பிரன்டன் எனும் 28 வயது வெள்ளையின மேன்மைவாத பயங்கரவாதி கடந்த வெள்ளிக்கிழமை நியுசிலாந்தில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்களினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், இன்றைய தினம் அந்நாட்டு நாடாளுமன்றில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் போது உரையாற்றிய பிரதமர் ஜெசின்டா அர்டன் குறித்த நபரை பயங்கரவாதி என்று மட்டுமே அழைப்பேன் எனவும் அவனது பெயரை ஒரு போதும் உச்சரிக்க மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழமையாக முஸ்லிம்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களை பயங்கரவாத தாக்குதலாக சித்தரிக்க மேலை நாட்டு ஊடகங்கள் தயங்கி வரும் நிலையில் இம்முறை நியுசிலாந்து பிரதமர் அதனை பயங்கரவாத தாக்குதல் என அறிவித்ததையடுத்து பெரும்பாலும் அனைத்து சர்வதேச ஊடகங்களும் பிரன்டனை பயங்கரவாதியெனவே அடையாளப்படுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

பயங்கரவாதி பிரன்டனின் செயலை நியாயப்படுத்திப் பேசிய அவுஸ்திரேலிய செனட்டர் மீது 17 வயது அவுஸ்திரேலிய இளைஞன் முட்டைத் தாக்குதல் நடாத்தியிருந்தமையும் அவதானிக்கத்தக்க விடயமாகும்.


No comments:

Post a Comment