அலஹிட்டியாவ விகாரைக்குள் புகுந்து திருட்டு - சிலை உடைப்பு: ச.நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 March 2019

அலஹிட்டியாவ விகாரைக்குள் புகுந்து திருட்டு - சிலை உடைப்பு: ச.நபர் கைது!கட்டுகம்பொல பொலிஸ் பிரிவில் அலஹிட்டியாவ என்ற முஸ்லிம் கிராமத்தில் உள்ள விஹாரையின் சிலை உடைக்கப்பட்டுள்ளதுடன் விஹாரை உண்டியலைத் திருட வந்த சந்தேக நபருடன் கைகலப்பு ஏற்பட்டதால் விஹாரையின் இளம் பௌத்த தேரர் காயத்திற்கு உட்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பம் இன்று  அதிகாலையில்  2.00 மணி அளவில் இம்பெற்றுள்ளது.

தம் சகோதரியின் வீட்டின் முன்னால் அமைந்துள்ள விகாரைக்குள் புகுந்து திருட முற்பட்ட போது அங்கு இருந்த இளம் பௌத்த தேரர் விழித்துக் கொண்டதன் பயனாக இருவருக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தில் காயத்திற்குள்ளான இளம் தேரர் தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  சந்தேக நபர் தப்பித்து ஒடிய போது ஊரவர்கள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் போதை வஸ்துப் பாவனைக்கு உட்பட்டவர் எனவும் ஊரில் திருட்டு வேலைகளில் தொடர்புடையவர் என்ற காரணத்தினால் சம்பவத்தின் பின்னணியில் எந்தவிதமான பதற்றமான  சூழ்நிலையும் காணப்பட வில்லை. 

இன்று 2.00 மணிக்கு கட்டுகம்பொல பொலிஸில் முஸ்லிம் ஊர் முக்கிய பிரமுகர்கள் சமாதான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். கட்டுகம்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

-இக்பால் அலி

No comments:

Post a comment