நியுசிலாந்தில் இடம்பெற்றது 'பயங்கரவாத' தாக்குதல்: பிரதமர் - sonakar.com

Post Top Ad

Friday, 15 March 2019

நியுசிலாந்தில் இடம்பெற்றது 'பயங்கரவாத' தாக்குதல்: பிரதமர்நியுசிலாந்தில் இடம்பெற்றது மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என தெரிவித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் ஜெசின்டா அர்டன்.


ஆண்கள் - பெண்கள் உட்பட வெள்ளிக்கிழமை தொழுகைக்காகச் சென்றிருந்த 49 நிராயுதபாணிகள் மீது பள்ளிவாசலுக்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தீவிரவாத குழுவொன்றினால் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ள அதேவேளை இவ்வாறானவர்களுக்கு தமது நாட்டிலும் உலகத்திலும் வாழத் தகுதியில்லையென ஜெசின்டா தெரிவித்துள்ளார்.


கைதானவர்களுள் ஒருவர் ஏலவே தாம் அவுஸ்திரேலிய பிரஜையென தெரிவித்துள்ள நிலையில் நியுசிலாந்து காவற்துறை இதுவரை நால்வரைக் கைது செய்துள்ளதுடன் அதில் மூவர் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருப்பதாக தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment