கஞ்சிபானை இம்ரானை மூன்று மாதங்கள் தடுத்து வைக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Saturday, 30 March 2019

கஞ்சிபானை இம்ரானை மூன்று மாதங்கள் தடுத்து வைக்க முஸ்தீபு


பாதாள உலக பேர்வழியாக அறியப்படும் கஞ்சிபானை இம்ரான் டுபாயிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட நிலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுபத்தப்பட்டு வரும் நிலையில் குறித்த நபரை மூன்று மாதங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க நீதிமன்றை நாடவுள்ளது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு.மாகந்துரே மதுஷோடு டுபாயில் கேளிக்கை நிகழ்வொன்றில் வைத்து போதைப் பொருள் உபயோகித்த குற்றச்சாட்டில் முப்பதுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை தற்போது இலங்கைக்குத் திருப்பியனுப்பி வருகிறது அந்நாட்டு நிர்வாகம்.

இலங்கையில் இடம்பெற்ற பிரபல கொள்ளைகள், கொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை நடாத்துவதாகக் கருதப்படும் மாகந்துரே மதுஷின் வருகை எதிர்வரும் வாரம் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment