புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாற்று வழி என்ன? மஹிந்த கேள்வி! - sonakar.com

Post Top Ad

Saturday, 30 March 2019

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாற்று வழி என்ன? மஹிந்த கேள்வி!


5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது போன்று பின் தங்கிய இடங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் நாட்டின் பிரபல பாடசாலைகளில் இணைந்து கல்வி கற்பதற்கான மாற்று வழி என்ன என்பதும் தெளிவு படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை, மாணவர்களுக்கு சுமையாக மாறி விட்டதாக பெருமளவு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அதனை இரத்துச் செய்யப் பணித்துள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், இது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லையென கல்வியமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் மஹிந்த இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment