நியுசிலாந்தில் 1943ன் பின் இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல்! - sonakar.com

Post Top Ad

Friday, 15 March 2019

நியுசிலாந்தில் 1943ன் பின் இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல்!


1943ம் ஆண்டு, இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது கைதான 48 ஜப்பானிய சிறைக்கைதிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலே மோசமான தீவிர தாக்குதல் என அந்நாட்டின் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


பெப்ரவரி 25ம் திகதி 1943ம் ஆண்டு சிறைக்குள் எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட ஜப்பானிய கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த துப்பாக்கி பிரயோகத்தையடுத்து 31 பேர் ஸ்தலத்திலும் 17 பேர் காயமுற்றிருந்த நிலையில் பின்னரும் உயிரிழந்திருந்தனர்.


இச்சம்பவத்திற்குப் பின்னர் வெள்ளியன்று கிறிஸ்ட் சேர்ச்சில் இரு பள்ளிவாசல்களுக்குள் புகுந்து பயங்கரவாதி பிரன்டன் குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் ஆண்கள் பெண்கள் உள்ளடங்கலாக 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது தாக்குதல் திட்டம் தொடர்பில் முன்னரே இணையங்களில் தகவல் வெளியிட்டு வந்த பிரன்டன் இன்றைய தினம் துப்பாக்கி பிரயோகத்தை பேஸ்புக் ஊடாக நேரடியாகவும் ஒளிபரப்பியிருந்த நிலையில் கைது தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் 27 வருட சிறைத்தண்டனைக்குத் தயாராகவே இருப்பதாக குறித்த நபர் ஏலவே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment