2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்! - sonakar.com

Post Top Ad

Friday, 15 March 2019

2011 முதல் உலகம் சுற்றிய பயங்கரவாதி; பல்கேரியாவில் விசாரணை ஆரம்பம்!நியுசிலாந்தில் வெள்ளியன்று பயங்கரவாத தாக்குதலை நடாத்தி 49 உயிர்களைப் பலியெடுத்த பிரன்டன் டரன்ட், 2011ம் ஆண்டு முதல் உலகில் பல நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளமை குறித்து அவரது தோழியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.


இறுதியாக கடந்த நவம்பர் மாதம் பல்கேரியாவுக்கு சென்றுள்ள பிரன்டன் பற்றி அந்நாட்டின் காவற்துறை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை கடந்த வருடம் பாகிஸ்தானுக்கும் குறித்த நபர் விஜயம் செய்துள்ளது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதன் போது அங்கு பிரன்டன் தங்கியிருந்ததனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோட்டல் உரிமையாளரினால் பதிவிடப்பட்ட படம் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் 2016 - 2017ல் இடம்பெற்ற பல்வெறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் குறித்த நபர் கூடுதல் அவதானம் காட்டியள்ள அதேவேளை வடகொரியாவுக்கும் விஜயம் செய்துள்ளமை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


மேற்காணும் படத்தில் பயங்கரவாதி பிரன்டன் தனது தந்தையுடன் காணப்படுவதோடு, பாகிஸ்தானில் எடுத்த படம் மத்தியில் காணப்படுகிறது. தன்னை ஒரு வெள்ளையின மேன்மை வாதியாக அடையாளங் காட்டிக்கொண்டுள்ள குறித்த நபர், தாக்குதல் திட்டங்களை ஏலவே பகிரங்கப்படுத்தி விட்டே பள்ளிவாசலுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment