கெவுமாவின் நெருங்கிய பெண் சகாவைத் தேடும் பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 March 2019

கெவுமாவின் நெருங்கிய பெண் சகாவைத் தேடும் பொலிஸ்!


மாகந்துரே மதுஷின் போதைப் பொருள் விற்பனையை முன்னெடுத்து வந்ததாகக் கருதப்படும் கெவுமா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபரின் நெருங்கிய பெண் சகா என நம்பப்படும் துஷாரி என பரவலாக அறியப்படும் 47 வயது நிரிஷா நில்மினி பெரேரா எனும் பெண்ணைத் தேடுவதாக அறிவித்துள்ளது பொலிஸ்.


இப்பின்னணியில் பொது மக்களிடமிருந்தும் தகவல் உதவி கோரப்பட்டுள்ளதுடன் விபரம் அறிந்தவர்கள் 071-5891589 என்ற தொலைபேசி இல்கம் ஊடாக தொடர்பு கொள்ளும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கெவுமா போதைப் பொருளை களஞ்சியப்படுத்துவதற்கு பல வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து வந்தவர் என பொலிசார் துசாரி தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment