ஞானசாரவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் கண்காணிப்பு வேலை! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 March 2019

ஞானசாரவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் கண்காணிப்பு வேலை!


ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போதிலும் வைத்தியசாலையில் வைத்தே பராமரிக்கப்பட்டு வந்த ஞானசார குணமடைந்து விட்டதாக கடந்த வாரம் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.


இந்நிலையில், அவரை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று அங்கு வழங்கப்பட்ட பணிகளை செய்ய மறுத்து வந்ததன் பின்னணியில் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலையில் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஞானசாரவை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முன்கூட்டியே வெளியாகி வாத விவாதத்தைத் தோற்றுவித்திருந்த நிலையில் அத்திட்டத்தினை ஜனாதிபதி கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment