ஜனாதிபதியின் செலவீனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 March 2019

ஜனாதிபதியின் செலவீனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி!


ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை உறுப்பினர்களின் இடைக்கால மிரட்டல்கள் பிசுபிசுத்துப் போன நிலையில் ஜனாதிபதியின் செலவீனங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆட்சேபனையின்றி அனுமதிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி - பிரதமர் அலுவலகங்கள் உட்பட 22 நிறுவனங்களுக்கான செலவீனங்களுக்கு வாக்கெடுப்பு அவசியமில்லையென பிரதமர் அறிவித்திருந்தமையும் எவ்வித எதிர்ப்பும் வெளியிடப்படாமையும் குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் தாம் எதிர்க்கப் போவதாகவும் ஜனாதிபதி தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்து வருவதாகவும் தெரிவித்து வந்தமை  நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment