20: பிரதமருடன் JVP பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Friday, 22 March 2019

20: பிரதமருடன் JVP பேச்சுவார்த்தை

https://www.photojoiner.net/image/wtHJB8my

20ம் திருத்தச் சட்டம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று ஜே.வி.பி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் இது தொடர்பில் ஜே.வி.பி கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது.

பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமது ஆட்சிக்காலத்துக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கப் போவதாகவும் இனியொரு தடவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனவும் கூட தெரிவிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a comment