நியுசிலாந்து ஊடகங்களிலும் 'ஸகார்ப்' முன்மாதிரி! - sonakar.com

Post Top Ad

Friday, 22 March 2019

நியுசிலாந்து ஊடகங்களிலும் 'ஸகார்ப்' முன்மாதிரி!சமூகங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் இன்றைய தினம் நியுசிலாந்து எங்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பெண்கள் ஸ்கார்ப் அணிவதற்கான வேண்டுகோளும் சிவில் அமைப்புகளால் முன் வைக்கப்பட்டிருந்தன.

பெரும்பாலும் பல இடங்களில் நியுசிலாந்து பெண்கள் இவ்வாறே ஸ்கார்ப் அணிந்திருந்ததோடு ஊடகங்களிலும் இதில் பங்களித்துள்ளன. செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சி நடாத்தும் பெண்கள் என பெரும்பாலானோர் இவ்வாறே இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்சியளித்திருந்தனர்.

அத்துடன், இதனூடாக அங்கு வாழும் முஸ்லிம்களும் தாமும் வேறில்லையெனவும் தாமும் ஸ்கார்ப் அணிவதன் மூலம் தம்மை வேறுபடுத்த முடியாது எனும் செய்தியை பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த ஒரு வாரமாக நாடெங்கிலும் பாரம்பரிய ஹக்கா நடனங்கள் இடம்பெற்று வருவதுடன் பாடசாலைகளும் இதில் பங்களித்து வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.

-Jameel M.

No comments:

Post a comment