மைத்ரி வழக்கில் ஆஜரானதால் கொலை மிரட்டல்: சட்டத்தரணி - sonakar.com

Post Top Ad

Friday, 22 March 2019

மைத்ரி வழக்கில் ஆஜரானதால் கொலை மிரட்டல்: சட்டத்தரணி


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மன நலனை பரிசோதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜரானதால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக பொலிசில் முறையிட்டுள்ளார் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர்.

தனது குடும்பத்தினர் வாழும் இடங்களுக்குச் சென்று தன்னைப் பற்றி விபரம் திரட்டியுள்ளதோடு ஹல்ப்ஸ்டொப் வரை தன்னை ஒரு குழுவினர் பின் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 26ம் திகதியளவில் மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட திடீர் அரசியல் பிரளயத்தின் பின்னணியில் அவரது மன நலனை பரிசோதிக்கக் கோரி குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment