கோட்டாபே வேட்பாளரானால் 'சந்தோசம்': மங்கள - சஜித்! - sonakar.com

Post Top Ad

Friday, 22 March 2019

கோட்டாபே வேட்பாளரானால் 'சந்தோசம்': மங்கள - சஜித்!


கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆதரவளித்து வரும் தொடர்ச்சியில் மங்கள சமரவீரவும் - சஜித் பிரேமதாசவும் இணைந்துள்ளனர்.நவின் திசாநாயக ஏலவே கோட்டாபேயை 'ஜனாதிபதி வேட்பாளர்' என அறிமுகப்படுத்தி புகழ்ந்துரைத்துள்ள நிலையில் தற்போது மங்கள - சஜித் ஆகியோரும் அதனை வரவேற்றுள்ளனர்.

இதேவேளை, யார் போட்டியிட்டாலும் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது உறுதியெனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment