ரிசாத் பொய் சொல்கிறார்: அநுர யாப்பா பாய்ச்சல்! - sonakar.com

Post Top Ad

Friday 22 March 2019

ரிசாத் பொய் சொல்கிறார்: அநுர யாப்பா பாய்ச்சல்!


2012ம் ஆண்டு கூகுள் வரைபடத்தைப் பார்த்தே வில்பத்து சரணாலய பகுதிகள் நிர்ணயிக்கப்பட்டதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவிக்கும் கருத்தினை மறுதலித்து விசனம் வெளியிட்டுள்ளார் அநுர யாப்பா.


தாம் அமைச்சராக இருந்த காலத்தில் அவ்வாறு எதுவும் செய்யவில்லையெனவும் முறையான தகவல்கள் அடிப்படையில் ஜி.பி.எஸ் தொழிநுட்பம் உபயோகிக்கப்பட்டதாகவும் எந்தக் கிராமத்தையும் இல்லாதொழித்து சரணாலயம் விஸ்தரிக்கப்படவில்லையெனவும் அநுர யாப்பா பதிலளித்துள்ளார்.

எனினும், 2012ல் அப்பகுதிகளில் மக்கள் மீள்குடியேறியிருக்காத நிலையில் வரைபடங்கள் உருவாக்கப்பட்டதாகவும் பின்னர், அவை விடுவிக்கப்பட்டதாகவும் அதனையே தாம் குறிப்பிட்டதாகவும் ரிசாத் பதியுதீன் மீள் விளக்கமளித்துள்ளமையும் தேர்தல் காலத்தில் பேசு பொருளாகும் வில்பத்து விவகாரம் மீண்டும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் இடம்பெற்ற குறித்த விவாதத்தின் பகுதியை ஒலி வடிவில் செவிமடுக்க:

No comments:

Post a Comment