வழக்குகளை வாபஸ் பெற்ற ல.ஊ.ஆ: ஜோன்ஸ்டன் விடுதலை - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 March 2019

வழக்குகளை வாபஸ் பெற்ற ல.ஊ.ஆ: ஜோன்ஸ்டன் விடுதலைசொத்துப் பிரகடனம் செய்யாத குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற கலகக் காரருமான ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் பதிவு செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதையடுத்து ஜோன்ஸ்டன் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


தொழிநுட்ப தவறுகள் காரணமாக வழக்கைத் தொடர விரும்பவில்லையென தெரிவித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குகளை வாபஸ் பெற அனுமதி கோரியதையடுத்து நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

கூட்டாட்சி அதிகாரத்துக்கு வந்ததும் இவ்வாறு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பரபரப்பு உண்டாக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment