நியுசிலாந்து v பங்களதேஷ் கிரிக்கட் போட்டிகள் இரத்து - sonakar.com

Post Top Ad

Friday, 15 March 2019

நியுசிலாந்து v பங்களதேஷ் கிரிக்கட் போட்டிகள் இரத்து


நியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச்சில் இயங்கி வரும் இரு பள்ளிவாசல்களுக்குள் புகுந்து குடிவரவாளர்களுக்கு எதிரான தீவிர வலது சாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களினால் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் இதில் ஒரு பள்ளிவாசலில் தொழுகைக்காகச் சென்றிருந்த பங்களதேஷ் கிரிக்கட் அணி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை நாளை முதல் ஆரம்பமாகவிருந்த நியுசிலாந்து - பங்களதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி உட்பட அவுஸ்திரேலிய - நியுசிலாந்து பெண்கள் அணிகளுக்கிடையிலான போட்டிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளததாக அறிவிக்கப்பட்டுள்ளது.பங்களதேஷ் கிரிக்கட் அணியை பாதுகாப்பாக நாட்டுக்குத் திருப்பியனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment