நியுசிலாந்து: 10-15 நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிப் பிரயோகம் - sonakar.com

Post Top Ad

Friday, 15 March 2019

நியுசிலாந்து: 10-15 நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிப் பிரயோகம்


வலதுசாரி தீவிரவாதிகளால் நியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச்சில் இயங்கும் இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் 10-15 நிமிடங்கள் வரை நீடித்ததாக சாட்சிகள் நியுசிலாந்து வானொலியில் கருத்து வெளியிட்டுள்ளனர்.


உள்ளூர் பிரதேச மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ள அதேவேளை, துப்பாக்கி தாரி உயிரோடு இருக்கும் ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் சுட்டதாக நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா - நியுசிலாந்தில் குடிவரவாளர்களுக்கு எதிரான கடும்போக்குவாதம் கடந்த பல வருடங்களாக தீவிரமடைந்து வருவதுடன் பல இடங்களில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.இந்நிலையில், இன்றைய பள்ளிவாசல் தாக்குதல்கள் பலத்த அச்சத்தை உருவாக்கியுள்ளதுடன் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் என அரச தரப்பு தெரிவிக்கிறது. இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 49 பேர் உயிரிழந்து 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment